தமிழ் இனிது

ஜன்னலோர முகங்கள்

15/06/2019

ஜன்னலோர முகங்கள்

சிறுவயதில் எனக்கு என் வீட்டு ஜன்னலில் அமர்ந்து சாலையில் செல்வோர்கு கையசைக்கும் வழக்கம் உண்டு. பின்நாளில் அதை அநாகரீகம் என்று தவிர்த்துவிட்டேன். ஆனாலும், இரயில் பயணங்களில் அதே வழக்கம் அநாகரீகமற்றதால் அதனை தொடர்ந்து வந்தேன். பல சமயங்களில் மக்கள் இரயில் பயணிகளுக்கு கையசைப்பதைப் போல் வேறு யாருக்கும் அசைப்பதில்லை என்று தோன்றும், விமானத்தில் முகம் தெரியாததும், பேருந்தில் மிக நெருக்கமாக தெரிவது கூட காரணமாக இருக்கலாம்.

இரயில் பயணங்களில் நம் மனநிலையும் ஒரே போல் இருக்காது, பயனத்தின் நீளத்தையும், நேரத்தையும், சுழ்நிலையையும் பொருத்து நம் மனமிருக்கும், நம் மனத்தை பொருத்து நம் முகமிருக்கும். அதனால், இரயிலுக்கு வெளியே இருந்து பார்பவர்களுக்கு என் முகம் மலர்ந்து, சோர்ந்து, வாடி, வதங்கி இருக்கலாம். இப்பொழுது கூட நான் இரயில் நிலையங்களில் காத்திருக்கையில், என்னை கடக்கும் இரயிலில், ஜன்னல்களினூடே தெரியும் முகங்களை காண முயல்கிறேன்.

எத்தனை விதமான மனிதர்களை கண்டுவிட முடிகிறது அந்த கண நேரத்தில். சோர்வாய், உற்சாகமாய், கனிவாய், காதலாய், விரக்தியாய், இவ்வாறு எத்தனை முகங்கள். வடதேசத்திலிருந்து வரும் வண்டியென்றால் ஒரு குட்டி பாரதத்தையே கண்டுவிட முடியும். உலகிலுள்ள அனைத்து விதமான மானிடர்களை பார்த்துவிட துடிக்கும் ஆசையை பல சமயங்களில் நசித்துவிடுகின்றன, திரைச்சீலைக்குள் மறைந்து கொள்ளும் ஏ.சி ஐன்னல்கள். நான் மிக ஈடுபாட்டோடு ஐன்னல்களை வெறிப்பதால், என் அருகில் இருப்பவர்கள் அந்த அற்புத காட்சியை அனுபவிக்கிறார்களா என கவனித்ததேயில்லை, பேரும்பாலும் தவற விடுகிறார்கள் என்றே நினைக்கிறேன். தாங்கள் அடுத்தமுறை இரயிலுக்காய் காத்திருக்கையில் கொஞ்சம் பரபரப்பை குறைத்து இக்காட்சியை தவறாமல் காண முயலுங்கள்..

வாசகர் கருத்துக்கள்..

பெயர்: *

மின்னஞ்சல்:

கருத்து: *