தமிழ் இனிது

நேர்கொண்ட பார்வை - என்பார்வையில்

14/08/2019

நேர்கொண்ட பார்வை - என்பார்வையில்

பாரத சமூகம் திரைத்துறையை சார்ந்தே சிந்திக்கிறது. நன்றோ, தீமையே திரைப்படங்கள் இரண்டையுமே தந்திருக்கின்றன. ஒரு படைப்பின் தரத்தை விட அப்படைப்பின் நோக்கம் முக்கியம். தமிழ் திரை வரலாற்றில் பல நன்நோக்க திரைப்படங்கள் இருப்பினும், அவை ஜனரஞ்சகத்தில் கோட்டை விட்டுவிடுகிறது. படைப்பாளிகள், அது எப்படைப்பாயினும், தொழிலாயினும் தன் படைப்பை நாட்டின் கடைகோடி நிலையிருப்பவன் முதல் நவநாகரீக மனிதர்கள் வரை சேர்க்கும் வகையில் அமைக்க வேண்டும். அத்தோடு சமகாலத்து ரசிகர்களின் அவசரமாய் தீர்மானிக்கும் வழக்கத்தையும் கருத வேண்டும். தங்கள் படைப்பு ஒரு குறிப்பிட்ட ரசனையுடையவர்களுக்கு எனில் அதை வெளிப்படையாக கூற வேண்டும்.

இந்த செயல்கள் அனைத்தையும் சரியாக செய்த திரைப்படமாக நான் "நேர்கொண்ட பார்வை" -யை கருதுகிறேன் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்களுக்கு பிடித்த வகையில், ஆனால் அவரை சுற்றி திரைக்கதை அமைக்காத இயக்குனர்க்கு பாராட்டுக்கள். நான் இந்த திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை காணவில்லை(பெரும்பாலும் சரியாக விளங்காத காரணத்தினால் அப்படங்களே பார்ப்பதில்லை), ஆனால், அது இத்தனை தட்டு மக்களைக்கும் இக்கருத்தை சேர்த்திருக்குமா என்று தெரியவில்லை. அஜித்தை போன்ற மக்களால் நிரம்ப விரும்பப்படும் கதாநாயகர்கள், இது போன்ற கதைக்கு வாய்பு குடுத்ததே காரணம். மேலும் அஜித்தை வைத்து காசு பார்க்க முயலாமல் கதை சொல்ல முயன்ற, தயாரிப்பாளருக்கும் முக்கிய பங்கு உண்டு.

சோக கதை பார்ப்பதில்லை என்று விட்டு விடாதீர்கள், இது மூன்று பெண்களின் வீரக்கதை.

கடைசியாக, இது போன்ற கதைகளை அடக்கடி முயற்ச்சிக்காமல், அப்அப்போது முயற்ச்சிப்பதே நலம். ரசிகர்களும் சுனங்காமல் முன் சொன்ன கருத்தையும் அசைபோட நேரம் கிடைக்கும். குடும்பத்துடன்(13 +) அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம், வாழ்கையின் எதார்தங்களை சுலபமாக பேச முடியாவிட்டாலும் இது போன்ற திரைப்படங்களினால் நம் கருத்தை குழந்தைகளிடம் தெரிவித்து விட முடியும். சோக கதை பார்ப்பதில்லை என்று விட்டு விடாதீர்கள், இது மூன்று பெண்களின் வீரக்கதை.

வாசகர் கருத்துக்கள்..

பெயர்: *

மின்னஞ்சல்:

கருத்து: *