தமிழ் இனிது

காட்பாதரும்.. பாரதமும்..

20/12/2019

காட்பாதரும்.. பாரதமும்..

இரண்டு மூன்று ஆண்டுகள் ஆயின காட்பாதர் திரைப்படம் பார்த்து, வாழ்கையின் ஒவ்வொரு படிகளிலும் புதிதாய் தெரிகிறது. இதை போன்ற ஒற்றுமை பாரத மகாபுராணத்திற்கும் உண்டு. சிறு வயதில் கதையால் கவர்ந்த பாரதம், பருவத்தில் பாத்திரங்களால் ஈர்த்தது, தற்போது துரியோதனின் உணர்ச்சிகளையும் உணர முடிகிறது, பிந்நாளில் இப்பாரத காவியம் நம் ஒவ்வொருவர் மனதிலும் வேற்றுரு கொள்ளும் என்பதில் ஐய்யமில்லை.

அது போன்று காட்பாதர் (பாகம் 1) திரைப்படமும் ஜாக்கி சான் இல்லாத ஆங்கில திரைப்படங்கள் காண தொடங்கிய காலத்தில் புரியாத விந்தையாக இருந்ததாய் நினைவு. பின்னர் கல்லூரியின் முதல் வருடத்தில் ஒரு கிலாசிக்கள் திரைப்படமாக தோன்றியது, கல்லூரியின் கடைசி வருடம் காணும்போது அது ஒரு காவியம் எனும் உண்மை விளங்கியது. இன்று சரியாக 5 வருடங்கள் கழித்து பார்க்கும் போது, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் ஆழமும், அழுத்தமும் என்னை கவர்ந்தது.

முக்கியமாக மைக்கலின்(அல் பாசினோவின் காத பாத்திரம்) இரண்டாவது அண்ணனாக வரும் பாப்லோவின் காதப்பாத்திரத்தில் எத்தனை உண்மை கலந்திருக்கிறது. அவனால் தன் தந்தையை காக்க இயலவில்லை, தனது அண்ணனை போல் முரடனும் அல்ல, தனது தம்பியை போல் விவேகியும் இல்லை. ஆயினும் அக்குடும்பத்தில் மிகவும் மகிழ்ச்சியான ஆனாக இருக்கிறான், காரணம் அவன் வெகுளித்தனம்.

"நீ சாத்தானை தொடராமல் அவனால் விளையும் காரியங்களுக்கு துணை போகாமல் இருப்பாயா?" அதற்கு அவன் இருப்பேன என உறுதி கூறும் சமையம் அவனே ஒரு டெவில்- ஆக உருபெற்று நிற்கிறான்.

அது போல் மைக்கேல் காட்பாதராக உருபெறும் காட்சியல், அவன் உண்மையிலேயே தனது தங்கையின் குழந்தைக்கு தெய்வத்தந்தையாகும் விழா நடைபெறுகிறது. பாதிரியார் கேட்கும் ஒவ்வொரு உறுதிக்கும் அவன் சம்மதிக்கும் போதும் அதற்கு முற்றிலும் மாறான ஒரு காட்சி பின்புறத்தில் நடைபெறுகிறது. கடைசியாக பாதிரி கேட்கும் கேள்வி, "நீ சாத்தானை தொடராமல் அவனால் விளையும் காரியங்களுக்கு துணை போகாமல் இருப்பாயா?" அதற்கு அவன் இருப்பேன என உறுதி கூறும் சமையம் அவனே ஒரு டெவில்- ஆக உருபெற்று நிற்கிறான்.

நிச்சியம் இன்னும் ஜந்து வருடம் கழித்து இத்திரைப்படம் பாரதம் அளவுக்கு அர்த்தம் தராவிட்டாலும், ஒரு புது அர்த்தம் தருமென்பது உறுதி. கையோடு Jio Cinema - வில் இலவசமாக கிடைக்கும் இத்திரைப்படத்தை ஒரு முறை அல்லது மறு முறை காண வேண்டுகிறேன்.

வாசகர் கருத்துக்கள்..

பெயர்: *

மின்னஞ்சல்:

கருத்து: *