தமிழ் இனிது

துயரச் சிகரம்

12/06/2019

துயரச் சிகரம்

வாழ்வின் பல தருங்களில் துயரம் தங்களை ஆழ்த்தி இருக்கலாம், ஆனால் என் தவறுகள் எல்லாம் என்னை ஒரு மூலையில் நிறுத்தி, ஒரு அடி நகர கூட நாதியற்ற அவ்வேளையில் இக்கவிதையை மனதிற்க்குள் இயற்றினேன். வருடம் பல கடந்து, அனைத்தும் சுகமாய் இருக்கும் இவ்வேளையில் நினைத்துக்கொள்வேன், எதுவும் நிரந்திரமல்ல, சுகமும்.. துக்கமும்..

என்ன இந்த மாயம் இன்று
தேகமெல்லாம் கொதிக்குதம்மா
தென்னங் காற்று கூட இன்று
தீக்கங்காய் பொசுக்குதம்மா
துன்பம் வந்து சேரும் போது
சுற்றம் நட்பு தாங்குதம்மா
அதுவும் இங்கு இல்லோர்க்கு
என்னகதி என் இறைவா !!

வாசகர் கருத்துக்கள்..

பெயர்: *

மின்னஞ்சல்:

கருத்து: *