தமிழ் இனிது

தெம்மாங்கு காதல்

23/12/2019

தெம்மாங்கு காதல்

தெம்மாங்கு என்பதற்குறிய இலக்கணம் நான் அறியேன். ஆனால், இதுதான் தெம்மாங்கின் வடிவம் என மனதிற்கொண்டு, காதலைக் கூறும் ஒரு மருத நில பாடாலாக இதைக் கொள்க. எண்ணத்தை கவிதை செய்யும் பயிற்சியின் ஆதியில் இருப்பவனின் முயற்சியை உணர்ந்து, பிழை பொருக்க.

கண்ணிரண்டு வேளாக கார்குழலோ மயிலாக
மண்மீது மானாக வந்தவளே கண்ணம்மா
என்மீது சாய்ந்ததென்ன கண்ணம்மா
பென்னொருத்தி கண்டதில்லை வேறொருவர் நினைந்ததில்லை
உன்னிடத்தில் என்னைத் தந்தேன் கண்ணம்மா
இனி நாமிருவர் ஒருவரானோம் பொன்னம்மா
பொன்னி நதி பெருக்கெடுத்து ஊழி வெள்ளம் வந்தது போல்
எந்தனுள்ளம் ஆடுதடி கண்ணம்மா
உன் ஓரவிழி பார்வை போதும் பொன்னம்மா
ஆடி மாசம் முடிஞ்சிருச்சி ஐப்பசியோ நெருங்கிருச்சி
பொங்க வரை பொருத்திருப்போம் கண்ணம்மா
நம்மாசையெல்லாம் பூட்டி வைப்போம் பொன்னம்மா

வாசகர் கருத்துக்கள்..

பெயர்: *

மின்னஞ்சல்:

கருத்து: *