தமிழ் இனிது

என்னைப் பற்றி

இரா.அருண் பிரசாத். இதுதான் இதுவரை எனக்கு தெரிந்த ஒரே பதில். பொறியியல் படித்து நிம்மதியாக வாழும் மிக சொற்ப ஜீவன்களில் ஒருவன். நிறைந்த வாழ்வும் அதையுணர்ந்த மனமும் வாய்க்க பெற்றவன். ரசிப்பதில் நாட்டமுடையவன் இயற்க்கை, புத்தகம், திரைப்படம், இசை, தொழில் நுணுக்கம் இதுபொன்ற எதையும் ரசிக்க முயல்பவன். எழுத்தில் எள்ளவேனும் அறிவிருப்பதாய் நினைப்பவன். லட்சியம் ஏதுமின்றி போகிற போக்கில் வாழ்க்கையை அனுபவிக்க காத்திருப்பவன். ஆனால் செய்வன திருந்த செய்ய, தவரினால் அதை திருத்திக்கொள்ள முயல்பவன்.

வார நாட்களை சென்னையிலும், வார விடுப்பை சொந்த ஊரிலும் வாழ்பவன். உலக ஞானம் ஓர் அளவுக்கு உடையவன். “Gen-X” என்று ஊரார் அழைக்கும் இன்றைய உலக சந்தையின் பசிக்கு உழைக்கும் ஓர் அப்பாவி உயிரினம். மனசாட்சிக்கு விரோதம் இல்லாத பணி செய்பவன், அதை எனக்கு பிடித்த நேரத்தில் செய்ய வழி தேடுபவன். வருடத்தில் எப்போதாவது நீண்ட மோட்டார் சைக்கிள் பயணம் செய்துவிட்டு அதைப்பற்றி வருடம் முழுக்க பெருமை பீத்துபவன். படிப்பதற்கு பால்யத்தில் நிறைய நேரம் செலவிட்டவன், அந்த பாலகனை நினைத்து இப்பொழுதும் பொறாமைப்படுபவன். இந்த பதிவுகளின் மூலம் என்னையும், என் தமிழையும் சீர்படுத்த முயல்பவன். என் எழுத்து, குரல், சிந்தை, செயல் இவற்றின் மூலம் சகமனிதரின் ரசனைக்கு விருந்தளிக்க விருப்பமுடையவன். எந்நாளும் தமிழன்..